இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24வது மாநாடு தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் இன்று காலை தொடங்கியது.
இன்று முதல் 31ந் தேதி வரை நான்கு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. 31ந் தேதி சனிக்கிழமை மாலை தமிழகம் முழுக்க இருந்து வரும் கம்யூனிஸ்ட் தோழர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான செந்தொண்டர்கள் பேரணியும் அதை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடக்கிறது.
இன்றைய மாநாட்டை மூத்த தோழர்களான ஆர்.நல்லக்கண்ணுவும், தா.பாண்டியனும் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். சி.பி.ஐ.யின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி.யும் மேலிட தலைவர்களாக கலந்து கொண்டனர்.
கட்சியன் செயலாளர் இரா.முத்தரசன் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் மாநில துணைச் செயலாளர்கள் திருப்பூர் சுப்பராயன், மு.வீரபாண்டியன் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட மாநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வேலையறிக்கை, எதிர்கால திட்டம், ஸ்தாபன அமைப்பு, மற்றும் அரசியல் நிலைபாடுகள் பற்றி நான்கு நாட்கள் தோழர்கள் நீண்ட விவாதங்கள் நடத்தி முடிவுகள் எடுக்கவுள்ளனர். இறுதியாக 31ந் தேதி சனிக்கிழமை புதிய மாநிலச் செயலாளர் தேர்வும் நடைபெறவுள்ளது.
Published on 28/03/2018 | Edited on 28/03/2018