நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அமைச்சர்கள் அவையில் பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நேற்று மதியம் ஜெய்பூரில் கட்சிக் கூட்டம் முடித்து விட்டு இரவு 01.00 மணிக்கு கரூர் சென்று சேர்ந்தேன். காலையில் கரூரில் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு விட்டு, டெல்லி வந்து இரவு 08.00 மணிக்கு நாடாளுமன்றம் சென்று எமது தொகுதியில் ரயில்வே பாலங்களில் உள்ள பிரச்சனை தொடர்பாக பேசினேன்.
தொடர்ச்சியான பயணம், தூக்கமின்மை, விமான நிலையத்தில் இருந்து பூஜ்ய நேரம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து, நேராக நாடாளுமன்றம் சென்றதால், களைப்பு முகத்தில் தெரிந்தது. அதனால்தானோ என்னவோ வாய்ப்பு கேட்டதும், சபாநாயகர் உடனடியாக பேச வாய்ப்பளித்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கடந்த வாரம் ஒரு நாள், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பூஜ்ய நேரத்தில் பேச சபாநாயகர் வாய்ப்பளித்தார். பல்வேறு போராட்டங்களுக்கிடையே பணியாற்றும் பெண்களை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சூறாவளியைப் போல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வரும் ஜோதிமணி எம்.பி.க்கு கரூர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மதியம் ஜெய்பூரில் கட்சிக்கூட்டம் முடித்துவிட்டு இரவு ஒரு மணிக்கு கரூர் சென்று சேர்ந்தேன். காலையில் கரூரில் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்துகொண்டு விட்டு,டெல்லி வந்து இரவு 8 மணிக்கு நாடாளுமன்றம் சென்று எமது தொகுதியில் ரயில்வே பாலங்களில் உள்ள பிரச்சினை தொடர்பாக பேசினேன். pic.twitter.com/m2cufN3L6i
— Jothimani (@jothims) December 13, 2021