தம்மைப் பற்றிய தகவல்களை வழங்கக்கூடாது என்று கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், வழக்கில் தொடர்பில்லாத மூன்றாவது நபர்கள் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களைக் கேட்கின்றனர். என்னைப் பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மூன்றாம் நபருக்கு வழங்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (Right To Information- RTI) கீழ் சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சசிகலா தரப்பு கடிதத்தை சுட்டிக்காட்டி கர்நாடக சிறைத்துறை பதிலளிக்க மறுத்துவிட்டது.
சசிகலா ஜனவரி 27- ஆம் தேதி விடுதலையாவார் என நரசிம்ம மூர்த்தி ஏற்கனவே கேட்ட கேள்விக்கு கர்நாடக சிறை நிர்வாகம் பதில் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.