Published on 18/08/2023 | Edited on 18/08/2023

சேலத்தில் அசைவ உணவும் ஒன்றில் சிக்கனுடன் சேர்த்து கரப்பான் பூச்சியும், பொறித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள அண்ணா நகர் பகுதியில் ஷமீம் சிக்கன் சென்டர் என்ற அசைவ ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சிலர் சிக்கன் 65 வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது பொறித்த சிக்கன் துண்டுகளுக்கு நடுவில் கரப்பான் பூச்சி ஒன்று மசாலாவில் பொறிக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ந்த அந்த நபர், கடை ஊழியர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.