தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்தத ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி கோவில்பட்டியில் நடைபெற்ற ஒன்றிய தலைவர் தேர்தலில் காலை 10 மணிக்கே திமுக, அதிமுக உட்பட 19 வார்டு உறுப்பினர்கள் உள்ளே அமர்ந்திருந்தனர். அதன்பிறகு அறையின் கதவுகள் மூடப்பட்டு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. சரியாக 11.15 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் 10 வாக்குகள் பெற்றுவெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். திமுக 9 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனனையடுத்து களத்திற்கு வந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வார்டு உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டறிந்து அதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதற்கான விளக்கத்தை நீங்கள் கூறாமல் போலீசாரை வைத்து வெளியே பலவந்தமாக வெளியேற்றியதின் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பி, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனவே இந்த வெற்றி செல்லாது என தர்ணா போராட்டத்தில் கனிமொழி ஈடுபட்டார்.
மேலும் அவர் கூறுகையில், இப்பொழுதுகூட அதிமுவை எதிர்த்துதான் ஓட்டு போட்ருக்கோம் என 10 பேர் எங்களுடன் நிற்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் 9 வாக்குகள் மட்டுமே பெற்ற அதிமுக எப்படி வெற்றி பெற்றதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.