'நிவர்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், மதுராந்தகம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 440 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 337 ஏரிகள் 75%, 101 ஏரிகள் 50%, 31 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 60.86 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,526 கனஅடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 1,269 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.