![tho](http://image.nakkheeran.in/cdn/farfuture/UUbXCtsJtp4MGEi9FCYKQ7apwyXlRAdStDAFauw6pUQ/1533347684/sites/default/files/inline-images/thottiyam.jpg)
ஆற்றில் நண்பர்களில் குளியலை படம் எடுத்த நண்பரை எரித்து கொன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டத்தின் எல்லை பகுதியான தொட்டியம் ஏரியாவில் திருநாராயணபுரம் காவிரி ஆற்றங்கரையில் கடந்த 4ம் தேதி எரிந்த நிலையில் ஓர் ஆண் உடல் இருப்பதாக காட்டுபுத்தூர் போலிசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணையில் இறங்கினர். விசாரணையில் கடந்த வாரம் அரசலூரில் உள்ள காவிரி ஆற்றில் அந்த ஏரியா பசங்களுக்கு இடையே அடிதடி பிரச்சனை நடந்து என்று முதல் கட்ட தகவல் பொதுமக்கள் மூலம் கிடைத்திருக்கிறது.
இதன் அடிப்படையில் அரசலூரில் விசாரணையில் துவங்கினர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த விமல் என்பவருடன் அந்த ஏரியா பசங்களோடு சண்டை நடந்தது என்று சொல்லவும் அந்த ஆற்றங்கரையில் சென்று பார்த்ததில் அங்கங்கே தரையில் ரத்தம் சிந்தி கிடந்தது. உடனே விமலை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலில் விசாரணையில் விமல் கொடுத்த வாக்குமூலம் போலிசாரையே அதிர்ச்சியடைய வைத்தது.
![tho1](http://image.nakkheeran.in/cdn/farfuture/OaEdJgNwB89FpriDYmrjhII2EEu0xEV6uxYv54psOjM/1533347684/sites/default/files/inline-images/thottiyam%201.jpg)
திருநாராணயபுரத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடல் நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி கணபதி நகரை சேர்ந்த சதிஷ் ஆவார். இவர் லோடு ஆட்டோ ஓட்டுபவர். இவர்களோட நண்பர்கள் வசந்த், ராஜேஸ்குமார், சிவசங்கரன், எல்லோரும் கடந்த 3ம் தேதி பைக்கில் மது அருந்திவிட்டு அந்த ஆற்றங்கரையில் இறங்கி குளித்திருக்கிறார்கள். அந்த பகுதியில் ஜன நடமாட்டமே எதுமே இல்லை. குளிப்பதற்கு எந்த முன்னேற்பாடு எதுவும் இல்லாமல் வந்ததால் கையில் குளிப்பதற்கான டவல் எதுவும் எடுத்து வரவில்லை. இருந்தாலும் உடைகளை களைந்து விட்டு வெறும் உடம்புடன் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது கணபதி, நண்பர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதை வாட்ஸ் - அப்பில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த நண்பர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. கடைசியில் நிர்வாண குளியல் வீடியோ வெளியான ஆத்திரத்தில் கணபதியை சரமாரியாக ஆத்திரத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளனர். கடைசியில் கட்டையினால் அடித்தும் கத்தியினால் குத்தியதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், கணபதி உடலை அங்கிருந்து பைக்கில் 7 கிலோமீட்டர் தூக்கி கொண்டு வந்து திருநாராயணபுரம் ஆற்றுப்பகுதியில் கொண்டு வந்து இருட்டிய பிறகு முட்புதரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். யாருக்கும் தெரியாதது என்று நினைத்துள்ளனர். ஆனால் மறுநாள் ஊரில் உள்ள எல்லோருக்கும் இது எப்படியே தெரிந்து விட்டது.
மேலும், வாக்குமூலத்தில் சதீஷ், தன்னோட நண்பர்கள் எல்லோரும் நாமக்கலில் இருக்கிறார்கள் என்று தகவல் சொல்ல, அதன் அடிப்படையில் நண்பர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
நிர்வாணகுளியல் படம் எடுத்து கொலையில் முடிந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.