இன்றைய பிக்பாஸ் நிகச்சியில் ஹவுஸ் மேட்களுடன் பேசிய கமல், பிக்பாஸ் ஒன்றில் பங்குகொண்ட ஹவுஸ் மெட்டுகளுக்கிடையே இருந்த ஐக்யூ உங்களுக்குகிடையே இல்லை. சிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் நீங்கள் சண்டை போடுகிறீர்கள் அதற்கு புகாரும் கொடுத்து வருகின்றீர்கள் எனக்கூறினார். மேலும் நீங்கள் பிக்பாஸ் ஒன் ஹவுஸ்மேட்ஸை போல பெருந்தன்மையாக இல்லை என கூறிய கமல் குறிப்பாக ஹவுஸ்மேட் மகத்தை வெளுத்து வாங்கினார். மேலும் மகத்திடம் நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு உள்ளே வந்தீர்கள் உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என திட்டினார்.

அதேபோல் மும்தாஜை பாராட்டிய கமல் உங்களிடம் இருக்கும் பொறுமை முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் உங்களுடன் நடித்திருப்பேன். உங்களுடன் நடிக்காதது எனக்கு இப்போது கவலையை தருகிறது. உங்களை போன்று மற்ற ஹவுஸ் மேட்ஸ்களும் பொறுமையை கடைபிடிக்கவேண்டும் என கூறினார்.