நடிகர் கமல்ஹாசன் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது வில்லாபுரம் பகுதியில் அவர் பேசியது,
எது தீவிரவாதம் எது பயங்கரவாதம் என்பதெல்லாம் தெரியாமல் இல்லை. தமிழர்களுக்கு புதிதாக தீவிரவாதத்தை சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை தேசத்தை காப்பாற்ற கூடிய எந்த ஒரு நிலையிலும் தமிழர்கள் பின்தங்கியது இல்லை ஒரே ஒரு கேள்வி இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் பெருமைப்பட்டார்களா? சரி இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்திய தமிழகத்தைப் பற்றி தமிழர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
தமிழ்நாட்டில் எத்தனை பேர் பெயரில் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளது எத்தனை பேர் பெயரில் ஜவஹர்லால் நேரு உள்ளது ஏராளம் ஏராளம். சரி வடநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயர் உள்ளதா கலைஞர் பெயர் உள்ளதா அதில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கக்கன் பெயர் உள்ளதா இல்லை ஆக மறைக்கப்படுகிறது.
இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டும் ஆகவே தான் நான் எனது பிரச்சாரத்தில் வெளிப்படையாக பேசி வருகிறேன். நான் கூறிய கருத்துக்கள் புண்பட்டது என்றால் அந்தப் புண்ணுக்கு சரியான மருந்து இந்த ஆட்சியாளர்கள் வெளியே செல்வது தான். அதிலும் கூட இவர்களின் வெள்ளை சட்டை வேட்டி கலையாமல் வெளியே செல்ல வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். எனக்கெல்லாம் தேசபக்தியை கற்றுக் கொடுக்க தேவையில்லை இனிமேலும் தேசபக்தி பற்றி பேச இந்த மனிதர்களுக்கெல்லாம் அருகதையே இல்லை என்றார்.