தமிழ்நாடு அனைத்து நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் அடையாறு எஸ்.பத்மநாபன் தலைமையில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் சுமார் 50 பேர் இன்று சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அடையாறு எஸ்.பத்மநாபன், கலைஞர் மறைந்துவிட்டார் என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் கலைஞர் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இந்த நிமிடம் வரை எங்களுடன்தான் இருக்கிறார். எங்களைப் போன்ற கலைஞர்களை மதிக்கக்கூடிய தலைவர், எங்களைப் போன்றவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதற்காக கலைமாமணி விருதினை அளித்தாலர். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தது. தற்போது உள்ள அரசு எங்களைப் போன்றவர்களை மதிக்கவில்லை என்றார்.