Skip to main content

“கலைஞர் நூற்றாண்டு எல்லோருக்கும் பயனளிக்கும் ஆண்டு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Artist's century is a year of benefit to all Chief Minister M.K.Stalin

 

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (24.7.2023) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமைத் தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்  ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “பெண் ஏன் அடிமையானாள்? என்று புரட்சிக் கேள்வியெழுப்பி, நமது சமூக அமைப்பு காரணமாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண் சமூகத்தின் அடிமை விலங்கை உடைத்தோம். மகளிர் முன்னேற்றத்திற்காக உழைத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  சொத்துரிமையும் பொருளாதார உரிமையும் அளித்த கலைஞர் ஆகியோர் கொண்ட இலட்சியத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். தேர்தல் அறிக்கையில் சொன்னோம். தருமபுரியிலிருந்து தொடங்கி விட்டோம். தொப்பூர் முகாமில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வந்த சகோதரிகளுடன் உரையாடி, இந்தத் திட்டத்தால் அவர்கள் பெறப் போகும் பயன்களை அவர்கள் கூறக் கேட்டேன். தன்னம்பிக்கை ஒளி அவர்களின் கண்களில் ஒளிர்ந்தது.  அகம் மகிழ்ந்தேன். கலைஞர் நூற்றாண்டு எல்லோருக்கும் பயனளிக்கும் ஆண்டு என்றேன். இந்தச் சாதனைச் சரித்திரம் தொடரும்” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்