Published on 24/02/2023 | Edited on 24/02/2023
![Kadampur Raju collected votes by working as a mason](http://image.nakkheeran.in/cdn/farfuture/r0mJgAc510bxe97PLaokvUEtbDFUlmJetdQ9T-etvaQ/1677241613/sites/default/files/inline-images/n223627.jpg)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நாள் அமைச்சர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதிமுக, திமுக என சமரசம் இல்லாமல் இரு தரப்பினரும் பரோட்டா போடுவது, டீ போடுவது, துணிகளைத் துவைப்பது என நூதன முறைகளைப் பின்பற்றி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு ஆலமரத்துமேடு பகுதியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அந்தப் பகுதியில் கட்டிட பணி நடைபெறும் இடத்திற்குச் சென்ற கடம்பூர் ராஜு கட்டிடத்திற்கு கற்களை எடுத்து வைத்து சிமெண்ட் பூசி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.