சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு வழக்குகளை அரசு கையாளும் போக்கை பார்த்தால் நீதித்துறை நெருக்கடியில் சிக்கி இருப்பதாக அறிவிக்கக்கூடிய நிலை ஏற்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான பொன்.மாணிக்கவேல் தான் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகியும் எங்களுக்கு அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என முறையிட்டார். சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்பதாக பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே புகார் கூறியிருந்தார்.
இதனையடுத்து ஆரம்பத்திலிருந்து உற்றுநோக்கையில் சிலைகடத்தல் தடுப்பு வழக்குகளை மாநில அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது, நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக தோன்றுகிறது என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து வழக்கை வரும் 21 தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம்.