மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டமானது வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் நாட்டின் பன்மை பண்பாடுகளை அங்கீகரித்து, பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மாநிலங்களுக்கு அதிகாரங்களை அளித்து மத்தியிலும் கூட்டாட்சி தத்துவத்தை அங்கீகரித்து வந்தது.
இந்தநிலையில், ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே சட்டம் என்ற பெயரால் நாட்டின் பன்மை பண்பாடுகளை சீர்குலைக்கும் பணிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. மாநில உரிமைகளை பறித்து மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. அரசியல் அமைப்பு சட்டத்தில் பண்பாடு விழுமிகளை ஒவ்வொன்றாக பறிக்கும் முயற்சியில் மத்தியல் ஆளும் பிஜேபி அரசு ஈடுபட்டு வருகிறது. அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க ஜனநாயக முறையில் அனைவரும் ஓரணியில் திரட்டு முயற்சியாகத் தான் இந்த மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இன்று ஒன்று கூடினார்கள்.
இந்த மாநாட்டிற்காக திருச்சியில் முக்கிய வீதிகளில் விளம்பர பலகைள், போர்டுகள், திருச்சி மாநகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர். காலையிலிருந்து இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருச்சி நாவலூர் மீரான் திடலில் நடைப்பெற்று வரும் மனிதநேய மக்கள் கட்சியின் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டின் தொடக்கமாக தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் "மாணவச் சமூகம் எழுகவே" கருத்தரங்கம் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் S.நூர்தீன் தலைமையில் நடைப்பெற்றது.
திராவிட கழக மாணவர் அணி ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,இந்திய மாணவர் பெருமன்றம் V.மாரியப்பன், அ னைத்திந்திய மாணவய் பெருமன்றம் சீ.தினேஷ்,இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(தமிழ்நாடு) மாநில கல்வி வளாகச்செயலாளர் R.அபுல்ஹசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பேரா.அருணன்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மதுரை மக்கள் கண்கானிப்பகம் செயல் இயக்குனர் ஹென்றி டிபேன்,தமுமுக துணை பொதுச் செயலாளர் முனைவர்.பேரா.ஜெ.ஹாஜாகனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கருத்தரங்கத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் லோகோ மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)
வி.நாராயணசாமி (முதல்வர், புதுச்சேரி மாநிலம்)
வி.பி.துரைசாமி (துணைப் பொதுச்செயலாளர், திமுக)
எஸ்.திருநாவுக்கரசர் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
வைகோ (பொதுச் செயலாளர், மதிமுக)
கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்)
ரா.முத்தரசன் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
பேரா. கே.எம்.காதர் மொய்தீன் (தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
முனைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா (தலைவர், மமக)
எஸ்.ஹைதர் அலி (பொதுச் செயலாளர் தமுமுக)
ப.அப்துல்சமது (பொதுச் செயலாளர் மமக) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.