Skip to main content

'பெண்' விஷயத்தில்  கறாரானவர் டிஜிபி திரிபாதி.!

Published on 29/06/2019 | Edited on 29/06/2019


2011-ல் சென்னை சிட்டி கமிஷ்னராக இருந்தவர் திரிபாதி. அப்போது நடந்த சம்பவத்தை இப்போது நினைவு கூர்ந்தார் காக்கி நண்பர்.   "அந்த வருடம் டிசம்பர் 24-ந்தேதி நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்றது. விடிந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் தேவாலயங்கள் எல்லாம் மின்னொளியில் ஜொலித்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன.

 

tb

 

காவல் ஆணையராக இருந்த திரிபாதி, சைரன் இல்லாத காரில் சாதரண உடையில் உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டார். சாந்தோம் தேவாலயத்தை தாண்டி செல்லும்போது, சாலையோரம் நின்றிருந்த ஒரு பெண், திடீரென கமிஷ்னரின் காரை நோக்கி கையை நீட்டி நிறுத்துமாறு சைகை காட்டி உள்ளார். 

 

தேவாலயத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்து இல்லாததால் லிப்ட் கேட்கிறாரோ? என்ற சந்தேகத்தில் காரை நிறுத்தச் சொன்ன திரிபாதி, எங்கே போகனும்? என்று அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

 

'உங்கள் இஷ்டம் நீங்கள் எங்க கூப்பிடுகிறீர்களோ? அங்கே வர நான் ரெடி'என்றிருக்கிறார் அந்த பெண். 

அப்போது தான், கமிஷனருடன் இருந்த 'கன்மேனு'க்கு புரிந்து விட்டது. பார்ட்டி 'அந்த' மாதிரி பெண் என்று. அவர் கமிஷ்னரிடம் விவரத்தை சொல்ல வெலவெலத்துப் போனார் கமிஷ்னர். உடனடியாக அந்த ஏரியாவின் (மயிலாப்பூர்) இன்ஸ்பெக்டரை மைக்கில் கூப்பிட்ட கமிஷ்னர் சம்பவ இடத்திற்கு வரவைத்து அந்த பெண்ணை ஒப்படைத்துள்ளார்.

 

அந்த நேரத்தில் காப்பகத்திலும் அந்த பெண்ணை ஒப்படைக்க முடியாது. லாக்கப்பிலும் இரவில் பெண்ணை வைக்க கூடாது. எனவே, காவல் நிலையத்தின் ஒரு அறையில் தங்க வைக்கவும், அப்போது மகளிர் போலீஸ் ஒருவரை துணைக்கு வைக்கவும் உத்தரவிட்டு" சென்றார். மறுநாள் அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

 

அந்த அளவுக்கு கறாராக நடந்து கொள்வதோடு, மனிதாபிமானத்தோடும் நடந்து கொள்வார் திரிபி. ஏனெனில் காவல்துறையில் உள்ள சக அதிகாரிகள் அவரை 'திரிபி' என்றே செல்லமாக அழைப்பர்.
 

சார்ந்த செய்திகள்