Skip to main content

ஜெயலலிதா மரணம்: விசாரணை அறிக்கை இன்று தாக்கல்?

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

 

Jayalalithaa's incident: Inquiry report filed today?


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், இன்று (23/08/2022) விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மொத்தம் 158 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இதில் ஏழு பேர் தாமாக முன்வந்து ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  இதுவரை 14 முறை அவகாசம் வழங்கிய தமிழக அரசு, ஆகஸ்ட் 24- ஆம் தேதிக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. 

 

எய்ம்ஸ் மருத்துவக் குழுமம் தனது அறிக்கையை கடந்த வாரம் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சுமார் 500 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆணையம் தயார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஆறுமுகசாமி ஆணையம் தங்களது இறுதி அறிக்கையை  இன்று அரசிடம் சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்