இருக்கும்போது ஒன்றும் இல்லாதபோது ஒன்றும் பேசக்கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
2008 திமுக ஆட்சியில் இருக்கும்பொழுது திமுக மகளிரணி செயலாளர் பால்மலர், அறிவாலய கூட்டத்திற்கு சென்று திரும்பிய அவரின் உடல் மர்மமான முறையில் மணிமங்கலம் ஏரியில் கைகால் கட்டிய நிலையில் கொலை செய்யபட்டு கிடந்தது. திமுக ஆட்சியிலே தன் கட்சியினை சேர்ந்தவருக்கு நடந்த அநீதிக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்காத ஸ்டாலின் தற்பொழுது பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறுவது ஆட்சியில் இருக்கும்போது ஒன்றும் இல்லாதபோது ஒன்றும் பேசும் போக்கையே காட்டுகிறது.
இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல அதேபோல் திமுக ஆட்சியில் சென்ட்ரல் ஜெயிலில் ஜெயிலர் ஜெயக்குமார் உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்டார். அதற்கெல்லாம் சிபிஐ விசாரணை கேக்காதது ஏன்? அன்று அவர் குற்றவாளிளை மறைக்கும் செயலில் ஈடுபட்டதைபோல எங்கள் அரசு இருக்காது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தருவோம் எனக்கூறினார்.
ரஜினி குறித்து பாரதிராஜா கூறிய கருத்திற்கு ''தமிழகத்தில் நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள்'' என பதிலளித்தார்.