Skip to main content

இளையராஜா விவகாரம்... கருத்து தெரிவிக்க மறுத்த ஜெயக்குமார் - வியப்புக்குள்ளான செய்தியாளர்கள்!

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

jkl

 

இளையராஜா விவகாரத்தில் தான் எந்தவித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது செய்தியாளர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். இளையராஜாவின் மோடி தொடர்பான இந்த புகழ்ச்சி தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும்,  இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

 

இதற்கு பதிலளித்த அவர், " அரசியல் அமைப்பு சட்டத்திலேயே கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை. இளையராஜா அவர் கருத்தைக் கூறியிருக்கிறார். அம்பேத்கர், மோடி குறித்த அவரின் ஒப்பீட்டில் என்னுடையக் கருத்தைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். உள்ளூர் பிரச்சனை முதல் உலக பிரச்சனை வரை கருத்து தெரிவிக்கும் ஆற்றல் பெற்ற ஜெயக்குமார், திடீரென இந்த விஷயத்தில் பின்வாங்கியது பத்திரிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

 


 

சார்ந்த செய்திகள்