Skip to main content

அர்ஜெண்டினா வெற்றியை அன்றே கணித்த ஜெயக்குமார்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

jkl

 

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி வழிநடத்தும் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.

 

அர்ஜெண்டினா பிரான்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டம் (3-3)என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் (4-2) என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா  வெற்றி பெற்றது. அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி 2, டி மரியா ஒரு கோல் அடித்தனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்றியது. 

 

இந்த வெற்றியை உலகில் உள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த வேளையில் அரசியல் தலைவர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாகத் தமிழக முதல்வர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வெற்றிபெற்ற அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " நான் கணித்தபடியே மூன்றாவது முறையாகக் கோப்பையை முத்தமிட்டுள்ளது அர்ஜெண்டினா. எளிதில் கிடைப்பது அல்ல வெற்றி, போராடிக் கிடைப்பதே வெற்றி. போராடி வெற்றிக் கோப்பையைப் பெற்ற அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்துகள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்