இன்று சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தேமுதிக அதிமுக கூட்டணிபற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
நேற்றைய தினம் தேமுதிகவை திமுக இவ்வளவு கேவலப்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுலாம் ஆனால் அதை இப்படி வெளிப்படையாக கூறி அவமானப்படுத்துவது என்பது ஒரு அரசியல் நாகரீகமில்லை.
இப்படியொரு பெருத்த அவமானத்தை பெற்றுள்ள தேமுதிக நிச்சயமாக அவர்களது வாழ்நாளிலே அவர்கள் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்றுதான் நான் கருதுகின்றேன் .அதேநேரத்தில் எங்கள் கூட்டணி கதவுகள் இன்னும் மூடபப்டவில்லை.வரட்டும், பேசட்டும்.
டெல்லிக்கு விமானம் புறப்பட தயாராகிவிட்டது எல்லாரும் அமர்ந்துவிட்டோம். பேச்சுவார்த்தை என்ற அடிப்படையில் என்ற பெயரில் டிக்கட்டும் கொடுத்தாச்சு, ஒன்லி போர்டிங் மட்டும் எடுத்துவிட்டு தேமுதிக உள்ள வரவேண்டியதுதான் பாக்கி. நாங்கள் 40 பேரும் டெல்லி போகிறோம் எனவே முடிவு செய்யவேண்டியது தேமுதிகதான் எனக்கூறினார்.