Skip to main content

ராக்கெட் கிராஃப்பில் எகிறிய மல்லிகைப் பூ விலை; விவசாயிகள் மகிழ்ச்சி 

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Jasmine flower prices skyrocket; farmers are happy


தற்பொழுது கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூச்சந்தையில் ஒரு கிலோ மல்லிகை கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் மல்லிகைப் பூ பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து குறைந்துள்ள நேரத்தில் திருமணம் மற்றும் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் பொதுவாகவே பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகை பூக்கள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால் கிலோ 2000  ரூபாய் என விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்