Skip to main content

ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு



ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் கோவையில் நடைபெற்ற வன்முறை குறித்து அரசு தரப்பு சாட்சியங்களுடன், ஒரு நபர் விசாரணை குழு அதிகாரியான ஓய்வு பெற்ற  நீதிபதி ராஜேஸ்வரன் கோவை விருந்தினர் மாளிகையில் கடந்த 28 ஆம் தேதி விசாரணை நடத்தினார். 

மூன்று நாட்களுக்கு தொடர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்து இருந்த நிலையில், திடீரென நேற்று  ரத்த அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் , தற்போது சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராக உள்ளதாகவும் இன்று  டிச்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

ஆனால் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இன்று கோவையில் இருந்து சென்னை செல்ல உள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அடுத்த விசாரணை தேதி முடிவு செய்த பின் சம்மன் விசாரணைக்கு வர சம்மன் அனுப்பபப்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அருள்

சார்ந்த செய்திகள்