Skip to main content

பொங்கல் திருநாள்- இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

jallikattu competition madurai district avaniyapuram

பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் இன்று (14/01/2021) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. 

 

கரோனா தடுப்பு விதிமுறைகளுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. காலை 08.00 மணிக்கு தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

 

ஜல்லிக்கட்டில் 430 மாடுபிடி வீரர்கள், 788 காளைகள் களம் காண இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை உரிமையாளருடன் ஒருவருக்கு மட்டுமே தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு தனிமனித இடைவெளியுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு கட்டில், சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் தலைமையில் 2,000- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

இதனிடையே, டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல்காந்தி, அவனியாபுரத்திற்கு காரில் செல்கிறார். பின்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு சென்று போட்டியை நேரில் பார்க்கிறார். ராகுலுடன் சேர்ந்து தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கிறார்.


 

சார்ந்த செய்திகள்