Skip to main content

ஜாக்டோ - ஜியோ தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
ஜாக்டோ - ஜியோ தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அடக்குமுறையை கைவிட்டு ஜாக்டோ - ஜியோ தலைவர்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை 1.4.2003க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்த அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு அமலாக்கிட வேண்டி வலியுறுத்தியும், மாநில அரசின் எட்டாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்திட வலியுறுத்தியும், ஊதியக்குழு முடிவுகளை அமலாக்குவதற்கு முன்பு இடைக்கால நிவாரணம் அறிவித்திட வேண்டுமென்றும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தினை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும் ஜாக்டோ - ஜியோ (ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) போராடி வருகிறது. நியாயமான இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆதரிக்கிறது. 

போராடும் ஆசிரியர் - அரசுஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, சென்னையில் நடைபெறவுள்ள பேரணிக்கு வருபவர்களை இரவோடு இரவாக வழிமறித்து கைது செய்துள்ளதையும், சென்னைக்கு வர முடியாமல் காவல்துறை தடுத்திருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டுமென மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்