Published on 06/09/2019 | Edited on 06/09/2019
ஈசா யோக மைய குருவான ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஏகா என்கிற தாயுமானவன் சமீபத்தில் திடீரென்று மாயமானது பற்றி தகவல் வெளியானது. மாயமான தாயுமானவன் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் ஜக்கி வாசுதேவுக்கு இதேபோல் மிகவும் நெருக்கமாக இருந்த திலீப் என்கிற ராஜரத்தினம் விபத்தில் இறந்ததாக சொல்லப்பட்டது. அப்போது ராஜரத்தினத்தின் மரணம் மர்ம மரணமாக பார்க்கப்பட்டது. அதேபோல் ராஜரத்தினத்தின் மனைவியும் காணாமல் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவர் பற்றிய தகவல் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மயமான தாயுமானவனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஈஷாவில் இருப்போரிடமிருந்தே கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். இதைப் புரிந்து கொண்ட ஜக்கி, தாயுமானவனைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தும்படி, காவல்துறையிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோரிக்கையை ஏற்ற காவல்துறை தாயுமானவனை தீவிரமாக தேடி வருவதாக கூறுகின்றனர்.