Skip to main content

அடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

ஆட்குறைப்பு என்ற நிலையில் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 3500 தொடக்க பள்ளிகளை இணைத்து அதன் வாயிலாக 3500 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்   பணியிடங்களை, 3500 சத்துணவு  அமைப்பாளர்களை, 3500 சமையலர்களை, 3500 உதவியாளர்களை, பணியிட குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது அரசாங்கம். அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜீ வகுப்புகளை ஆரம்பித்து அதில் தொடக்க கல்வியில் பணிபுரியும் 2381 இடைநிலை ஆசிரியர்களை சமூகநலத்துறைக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும்.

 

protest

 

1.பங்களிப்பு ஓய்வுதியத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய முறையினை நடை முறை படுத்திட வேண்டும்.

 

2. ஏழாவது ஊதிய குழுவின் முரண்பாடுகளை களையும் நோக்கில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்குஇணையான சம்பளத்தை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்குவழங்கிட வேண்டும் .

 

3. ஏழாவது ஊதிய குழுவின் 21மாதநிலுவை தொகையை வழங்கிட வேண்டும்

 

4. 2004 முதல் 2006வரை ஆசிரியர்களின் தொகுப்பு ஊதிய காலத்திற்கு  காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் !

 

5. சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் ,அங்கன்வாடி பணியாளர்கள் ,நூலக ஊழியர்கள் ,சுகாதாரதுறை ஊழியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்

 

6.ஆட்குறைப்பு செய்யும் அரசாணை எண் 56  தொடக்கபள்ளிகளை மூட இருக்கும் அரசாணை100,நிர்வாக சீர்கேடுகளைஏற்படுத்தி அதிகாரகுவியலை உருவாக்கி ஆசிரியர்களை பழிவாங்க வழிவகுக்கும் அரசாணை 101 போன்றவற்றை ரத்து செய்திட வேண்டும்!

 

7.ஆட்குறைப்பு என்ற நிலையில் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 3500தொடக்க பள்ளிகளை இணைத்து அதன்வாயிலாக 3500 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்   பணியிடங்களை, 3500 சத்துணவு  அமைப்பாளர்களை, 3500 சமையலர்களை, 3500 உதவியாளர்களை, பணியிட குறைப்பு செய்வதை தடுக்கவேண்டும்.

 

8.அரசுநடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜீ, யூ.கே.ஜீ வகுப்புகளை ஆரம்பித்து அதில் தொடக்ககல்வியில் பணிபுரியும் 2381 இடைநிலை ஆசிரியர்களை !சமூகநலத்துறைக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும்  போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ மூலம் சுமார் 14 இலட்சம் ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர்கள் ஜனவரி 18ந்தேதி மாலை தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தொடர்ந்து, 22-1-19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தல்   என்று தீர்மானித்துள்ளனர். 22-1-19 அன்று அனைத்துவகை பள்ளிகள் அரசு அலுவகங்கள் 100% மூடப்படவேண்டும் !அதே நாளில் அந்தந்த வட்ட தலைநகர்களில் கோரிக்கை ஆர்பாட்டம் காலை 10 மணிக்கு நடந்திட வேண்டும். 23-1-2019 24-1-2019 ஆகிய இரண்டுநாட்கள் வேலை நிறுத்தம் செய்து மறியல் போராட்டம் காலை 10மணியளவில் நடத்திட வேண்டும், 25-1-2019 அன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டு மாவட்ட தலைநகர்களில் காலை 10.00மணிக்கு மறியல் போராட்டம்  நடத்திட வேண்டும் என மாவட்ட குழுக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

 

வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய தமிழக அரசை போராட்டங்களின் மூலம் திணற செய்யவேண்டும், அரசு இயந்திரங்கள் ஸ்தம்பிக்க செய்யவேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்