மகளிர் கல்லூரி அருகே டாஸ்மாக்;
பொதுமக்கள் போராட்டம்
கோவையில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு மது பாட்டில்களை கடையில் இறக்கி கடையை திறக்க முயற்சி செய்து உள்ளது. இதனால் இன்று 12 மணியளவில் கடையை திறக்க ஊழியர்கள் வந்த போது அவர்களுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடைகளுக்குள் நுழைந்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்த கடை மூடப்பட்டது.
-அருள்