Skip to main content

சிம்பரம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
சிம்பரம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க
 பொதுமக்கள் எதிர்ப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடையை திறக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

சிதம்பரம் வட்டம் வேளக்குடி அருகே உள்ள மடத்தான்தோப்பு ரயில்வே கேட் அருகே  டாஸ்மாக் கடை  ஒன்று  இயங்கி வருகிறது. இப்பகுதி மக்கள்  அந்த கடையை மூடிட வேண்டும் என்று  உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த கடைக்கு அருகில்  இரண்டாவதாக  ஒரு கடை திறக்க முடிவு செய்து அதிகாரிகள்  அப்பகுதிக்கு சென்றுள்ளனர். இது குறித்து  தகவல் அறிந்த மடத்தாந்தோப்பு  மற்றும் பெராம்பட்டு பகுதி  பெண்கள், பொதுமக்கள்   சுமார் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று 2 வது கடையை இப்பகுதியில் திறக்கக்கூடாது என்று கூறி முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்து சென்ற அண்ணாமலைநகர் போலீஸார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி  2 வது கடை திறக்கப்படமாட்டது என்று உறுதி அளித்த பின்னர் தான் பொதுமக்கள் கலைந்து சென்றனர். கடை திறக்க வந்த அதிகாரிகளும் திரும்பி சென்றனர். இதனல் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

படவிளக்கம்- சிதம்பரம் அருகே மடத்தான்தோப்பு அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று போராடியவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்