Skip to main content

கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் பணியில் கைவினைக் கலைஞர்கள்!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020

 

சென்னை கொசப்பேட்டை பகுதியில் கைவினைக் கலைஞர்கள், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அன்றாட வருமானத்தைவிட ஒவ்வொரு ஆண்டும் சில பண்டிகை தினங்களின் போது கிடைக்கும் வருமானமே அவர்களது வாழ்வை நகர்த்த உதவுகிறது. அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகைகளின்போது பல வகையான பொம்மைகள் செய்து விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு ஆகஸ்டு 12 அன்று வரும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொட்டில் கிருஷ்ணர், வெண்ணை கிருஷ்ணர், கோகுல கிருஷ்ணர் என்று பல வகை கிருஷ்ண பொம்மைகள் செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்