திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 500க்கும் அதிகமான யாசகர்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக நமது நக்கீரன் இணையத்தில் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தோம். உணவு வழங்கும் சேவையாளர்களுக்கு ஊரடங்கு உத்தரவால் உள்ள நெருக்கடி பற்றியும் விவரித்துயிருந்தோம்.
இந்த தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கவனத்துக்கு சமூக நல ஆர்வலர்கள் கொண்டு சென்றுயிருந்தனர். அவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு ஒரேயிடத்தில் உணவை சமைத்து பார்சலாக வாகனங்களில் கொண்டு சென்று அவர்களுக்கு வழங்க அனுமதி அளித்து இருக்கிறார்.
அதனை தொடர்ந்து சில சமூக நல சேவை அமைப்புகள் அதன் ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு கிரிவலப்பாதையில், நகரத்தில் உணவு இல்லாமல் தவித்த யாசகர்களுக்கு மார்ச் 27ந்தேதி முதல் உணவுகளை காலை, மதியம், இரவு என வழங்குகின்றனர்.
உணவு, குடிநீர் இல்லாமல் தவித்த அவர்களுக்கு தற்போது வழங்க தொடங்கியபின் தான் அவர்கள் முகத்தில் பெரும் மகிழ்ச்சியை காண முடிகிறது என்கின்றனர் உணவு வழங்கும் பணியில் உள்ள சமூக சேவகர்கள்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்