Skip to main content

"மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும், சாத்தியமும் அல்ல"- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

"It is not fair or possible for the state government to reduce the tax level further" - Minister Palanivel Thiagarajan statement!

 

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி குறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று (19/11/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டுக்கே முன்னோடியாக பெட்ரோல் மீதான மாநில வரியை ரூபாய் 3 குறைத்தோம்; இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி இழப்பு;  நிதி நெருக்கடிச் சூழலிலும் தமிழ்நாடு அரசு இதனை ஏற்றுக் கொண்டது. 

 

01/08/2014 அன்று பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை மற்றும் சர்வதேச இறக்குமதி விலை ரூபாய் மதிப்பில் இன்றைய விலை நிலவரத்திற்கு நிகராக இருந்தது. 

 

2014- ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். 2014- ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது (அடிப்படை விலை ஏறத்தாழ சமமாக இருந்தபோது) பெட்ரோலுக்கு ரூபாய் 18.42-ம், டீசலுக்கு ரூபாய் 18.23- ம் கூடுதலாக மத்திய அரசு விதித்து வருகிறது.

 

கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்தது; இதை மீண்டும் 2014-ல் இருந்த அளவுக்கு குறைத்துக் கொண்டால் மாநில வரி விதிப்பு தானாகவே குறையும்; இதனை மத்திய அரசு செய்ய வேண்டும். 

 

மத்திய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும், சாத்தியமும் அல்ல" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்