Skip to main content

‘பாஜக மாடல் டோல்கேட்’ என்றே அழைக்கலாம் - சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

 It can be called “BJP Model Tollgate”..-S.Venkatesan review

 

அண்மையில் ஒன்றிய அரசின் 7 வகையான ஊழல்கள் குறித்து சி.ஏ.ஜி ஆய்வறிக்கை வெளியாகி இருந்தது. அதில் ஒன்று டோல்கேட்டில் நடைபெற்ற ஊழல் குறித்த அறிக்கை. இந்நிலையில் நவீன ஊழலின் அடையாளமாக பரனூர் சுங்கச்சாவடி விளங்குவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

 

டோல்கேட்டில் நடைபெற்ற ஊழல் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள சி.ஏ.ஜி அறிக்கை மாதிரியாக 10 டோல்கேட்டில்  நடைபெற்ற ஊழல்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த 10 டோல்கேட்களும் தமிழகத்தைச் சேர்ந்தது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் 53.27% வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கவில்லை என கணக்கு எழுதப்பட்டுள்ளது. அதேபோல் ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக பயணித்த 36.43 சதவீத வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என கணக்கு எழுதப்பட்டுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக பயணித்த சுமார் 89 லட்சம் வாகனங்களில் 32 லட்சம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை என மோசடி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2019 முதல் ஜூன் 2020 வரை 1.17 கோடி வாகனங்கள் பயணம் செய்துள்ளது. அதில் 62.37 லட்சம் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “செங்கல்பட்டு - பரனூர் டோல் கேட்டில் ஓராண்டில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது. இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள் என்று கணக்கு எழுதப்பட்டுள்ளது. நவீன ஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி ‘பாஜக மாடல் டோல்கேட்’ என்றே அழைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்