Skip to main content

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் நூதன முறையில் மோசடி!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
issue for through the IRCTC website

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 51) என்பவர் ரயில் மூலம் நாகர்கோயில் செல்லவிருந்த தனது ரயில் பயணத்தை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரத்து செய்துள்ளார். அப்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் உதவிக்கு (FOR HELP) என்று இருந்த 9832603458 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது ரயில் பயண கட்ட பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர் முனையில் பேசியவர் ஸ்ரீதரனின் ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். அதனை நம்பி ஸ்ரீதரனும் தனது ஏடிஎம் கார்டு விவரங்களை கூறி உள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்த எண்ணை ரயில்வே நிர்வாகம் பதிவிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. எனவே ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என வடபழனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்