கார்த்திகை மாதப் பிறப்பினை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம். ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரதீபம் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. அந்நாட்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், கார்த்திகை மாத முதல் நாளான இன்று சபரி மலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர். மேலும் 48 நாட்கள் விரதத்திற்காக மாலை அணியும் பொருட்டு சென்னை கோடம்பாக்கம் மாகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவில், அண்ணா நகர், கே.கே. நகர் மற்றும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவில் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்து வழிபாடு நடத்தினர்.
இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஆலயங்களில் மாலை அணிந்து விரதத்தை துவங்கியுள்ளனர். இன்னும் சிலர் இன்றே இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டனர்.