தமிழ்நாட்டில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், ஐ.ஜி.க்களாக 14 பேருக்கும், டி.ஐ.ஜி.க்களாக 3 பேருக்கும், பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ரம்யா பாரதி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக பிரவேஷ்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பிரவீன்குமார் அபிநவ், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக ரூபேஷ்குமார் மீனா, வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக ஆனி விஜயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
பொன்னி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை சரக காவல்துறை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மகேஸ்வரி ஐ.ஜி.யாக. பதவி உயர்வு பெற்று தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக கயல்விழி, தமிழ்நாடு காவல்துறை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக காமினி நியமிக்கப்பட்டுள்ளனர். துரைகுமார் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியம்மாள் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மாநில உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக விஜயகுமாரி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக லலிதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளனர்.