Skip to main content

“இந்த விசாரணை தேவையா?” - பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

"Is this investigation necessary?" Victims are dissatisfied with the issue of tooth extraction

 

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்மட்டக்குழு இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியதில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் மகாராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “அமுதா ஐஏஎஸ் விசாரணைக்கு நாங்கள் கடமைக்கு தான் வந்துள்ளோம். விசாரணை ஆணையம் அமைத்தும் எங்கள் தரப்பு வரவில்லை அதனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என அவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதால் தான் வந்துள்ளோம்.” என்றார். மேலும் பேசிய அவர், “பல்வீர் சிங், பல்லை உடைத்தது உறுதியாகியுள்ளது. அவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள்; எஃப்ஐஆர் போடுங்கள்; கைது செய்யுங்கள் என்று அமுதா ஐஏஎஸ் சொன்னால், அதை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை என்றால் அப்போது அமுதா ஐஏஎஸ் என்ன செய்வார். அவரால் அரசின் மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா... முடியாது. இந்த விசாரணை தேவையா?

 

ஆனால் போலீஸ் விசாரணை அப்படி இல்லை. ஒருவர் மேல் எஃப்ஐஆர் பதிவு செய்தார்கள் என்றால் அவரை கைது பண்ணலாம். அப்படி இல்லை என்றால் நீதிமன்றத்தை நாம் அணுகுவதற்கு வாய்ப்புள்ளது. அருணா ஜெகதீசன் ஸ்டெர்லைட் வழக்கில் அறிக்கை கொடுத்தார். இப்போது வரை என்ன நடந்தது. அதுதான் இப்போதும் நடக்கும். உடனடியாக அந்த 8 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு வேண்டும். அவர்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதுதான் நியாயமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்