பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் அதிமுக மக்களவை தலைவரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றுப் பேசிய போது.... எனது தேனி மக்களவைத் தொகுதியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி நிறுவுவதை அரசு விரைவுபடுத்த வேண்டும். இந்த தொகுதியில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. எனவே அவர்களுடைய குழந்தைகள் கல்வி கற்பதற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி தேவையாக உள்ளது.
சென்னை மண்டல அலுவலக கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் துணை ஆணையரின் வேண்டுகோளின் பேரில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் வடவீர் நாயக்கன்பட்டி கிராமத்தில் எட்டு ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பள்ளியை நிறுவுவதற்கான தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மாநில அரசால் பூர்த்தி செய்யப்பட்டு கேந்திரிய வித்யாலயா சங்கத்தனுக்கு முன்மொழிவு சமர்பிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவே தேனி மக்களவைத் தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி விரைவாக நிறுவ மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஒ.பி.ரவீந்திரநாத் குமார் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.