Skip to main content

தற்காலிக முறை கருத்தடை ஊசி அறிமுகம்: விஜயபாஸ்கர் பேட்டி!

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
தற்காலிக முறை கருத்தடை ஊசி அறிமுகம்: விஜயபாஸ்கர் பேட்டி!




சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் குடும்ப நலத்திட்டத்தில் தாய்மார்களுக்கான தற்காலிக முறை கருத்தடை ஊசி அறிமுக விழாவினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் குடும்ப நலத்துறை இயக்குனர் டாக்டர் ஜோதி, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் சாந்தி குணசிங் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

காண்டாக்செப்டியூப் புத்தகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்க குடும்ப நல இயக்குனர் டாக்டர் ஜோதி பெற்றுக்கொண்டார்.

 பின்பு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்...

தொடர்ந்து அனைத்து துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். சுகாதார குறியூடுகள் தான் வளர்ச்சியை நிர்ணயிக்கும். 3 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் என்பது 2015ல் 7.9 என்ற அளவிற்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் 3 வருட இடைவெளி வேண்டும் என்பதை மக்கள் நல்வாழ்வு துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் 13,882 மையங்களில் இந்த சேவை இருக்கிறது. காண்ட்ராசெப்டிவ் ஊசி எந்த கட்டணம் இல்லாமல் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 3 மாதத்திற்கு ஒரு முறை இந்த ஊசி போட்டால் போதும். இதில் எந்த வித பாதிப்பும் இல்லை.

இதற்கு தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து நர்ஸ்களுக்கும் சுமார் 460 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம்.

தமிழகத்தில் கருவளர் விகிதம் 1.6ல் இருக்கிறது. இது இந்திய அளவில் முதல் இடம். அந்த நிலையை நாம் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்று தான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

செய்தி, படங்கள் - அசோக்குமார்

சார்ந்த செய்திகள்