Published on 09/03/2019 | Edited on 09/03/2019

கடந்த மாதம் 25 முதல் 28 ஆம் தேதி வரை 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு திமுக தலைமை அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு, மார்ச் 1 முதல் நேற்றுவரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் அந்ததந்த தொகுதி பற்றிய நிலவரங்கள், தொகுதி பிரச்சனைகள், தேர்தலில் நிறுத்தினால் எதை அடிப்படையாக கொண்டு தேர்தல் பிரச்சாரம் நடத்துவீர்கள் போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டாதாக கூறப்படுகிறது.