Skip to main content

'திராவிட கருத்தியலுடன் பின்னிப் பிணைந்தவர்'-தமிழக முதல்வர் இரங்கல்

Published on 22/09/2024 | Edited on 22/09/2024
 'Intertwined with Dravidian Movement Ideology'-Tamil Chief Minister Condolences

இசிஐ திருச்சபையின் பேராயாரும், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்ரா சற்குணம் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக எஸ்ரா சற்குணம் (85 வயது) சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்ரா சற்குணத்தின் மறைவுக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'என் பிறந்தநாளில் மட்டுமின்றி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போதும் என்னை வாழ்த்த தவறாதவர் எஸ்ரா சற்குணம். கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் அவர்களின் நலன் பேணும் தளகர்த்தாவாகவும் செயல்பட்டு வந்தவர். அனைத்து சமூக மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர். சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படவும், அவர்கள் உரிமைகள் வென்றெடுக்கப்படவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.

திராவிட இயக்க கருத்தியலுடன் பின்னிப்பிணைந்தவர். கலைஞருடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர். எஸ்ரா சற்குணம் பிறந்தநாளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவரோடு கருத்துக்களை பரிமாறிய தருணங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது. பேராயர் எஸ்ரா சற்குணம் மாறாத அன்போடு என்னுடன் பழகியவர். அவர் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்