கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்திலுள்ள கஸ்தூரிபாய் நிறுவனம் என்ற பழமை வாய்ந்த துணிக்கடை நிறுவனம் மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மகிழ்ச்சிடையும் விதமாக கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை நினைவுப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. மேலும் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்ணிய பேச்சாளர் கீர்த்தனா கலந்துகொண்டு பெண்கள் எதையும் நம்பகூடாது சுயஅறிவுடன் செயல்படவேண்டும் என பெண்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சிதம்பரம் பகுதியில் விவசாயம், கல்வி, விளையாட்டு, காவல்துறை, என சிறந்த பணியாற்றி வரும் பெண்கள் 6 பேருக்கு 'நம்ம ஊரு நாயகி' என்ற பட்டத்தை வழங்கி சாதனை நாயகி என்ற கிரீடத்தை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொணடனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் முத்துக்குமரன் கூறுகையில், "இந்த ஊரில் கடை தொடங்கி பாரம்பரியமாக செயல்பட்டு வருகிறது. இந்த கடை வளர்ந்தது, இந்தப் பகுதியில் உள்ள மக்களின் ஒத்துழைப்பால் தான். நாங்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற திருவிழா நாட்களில் கடையின் முன்பு செட் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். அதேபோல் பெண்கள் இல்லா உலகு இல்லை. மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலும் சிறப்பாக அமையும். எனவே அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். இது வரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்படும்" என்றார்.