Skip to main content

மறைந்த இங்கிலாந்து மகாராணி.. வெளிவராத சுவாரசியத் தகவல்கள்!

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

jlk

 

மன்னராட்சியும் மக்களாட்சியும்

 

உலகத்தையே தன் உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த இங்கிலாந்து நாட்டில் எலிசபெத் அவரது தந்தை ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜின் மறைவுக்குப் பிறகு தன்னுடைய 25ஆவது வயதில் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மகாராணியாரின் மறைவு குறித்து இங்கிலாந்தின் சரித்திரத்தில் நீண்ட காலம் அரசியாக ஆட்சி புரிந்த பெருமையுடன் தனது முதிர்ந்த வயதில் நம்மிடையே இருந்து விடை பெற்றுக் கொண்டார் என்றார்.

 

பொதுவாக அரச குடும்பங்களில் எந்த முறைகேடுகளும் மகாராணியின் நிர்வாகத்தில் இடம் பெறவில்லை.  52 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக பணியாற்றிய இவர், வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதம மந்திரிகளை நியமித்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு எப்படி பறவைகள், வன விலங்குகளின் மீது பேரன்பு கொண்டிருக்கின்ராறோ அதைப்போல மறைந்த மகாராணிக்கும் நாய்க்குட்டி, குதிரை, பூனை என விலங்கினங்களின் மீது அலாதிப் பிரியம். இவரின் அரண்மனையில் நாயும் பூனையும் எப்போதும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் எலிசபெத் மகாராணி குறித்து  சுவாரசியமான தகவல் ஒன்றையும் அமைச்சர் தொடர்ந்து கூறுகிறார்.

 

ட்ரீ டாப்ஸ் "tree tops" எனும் புத்தகம் 

 

1952 ஆம் ஆண்டு அவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் மறைந்த உடன் இங்கிலாந்தின் அரசியாக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட சூழ்நிலை குறித்து, ஒரு காலத்தில் புகழ்பெற்ற வேட்டைக்காரராக இருந்து பின்பு இயற்கை ஆர்வலராக கானுயிர் பாதுகாப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜிம் கார்பெட் தன்னுடைய "tree tops" என்ற புத்தகத்தில் எந்த தகவலை முக்கியக் கருவாக வைத்திருந்தார், என்பதை சுவாரசியமாக விளக்குகிறார் அமைச்சர்.

 

jlk

 

1952 ஆம் ஆண்டு கென்யாவிற்கு சுற்றுப் பயணம்

 

மேற்கொண்ட இளவரசி எலிசபெத்தும் அவரது கணவர் பிலிப்ஸ்ம் நையீரி அருகே உள்ள ட்ரீ டாப்ஸ் என்று அழைக்கப்பட்ட மர வீடு ஒன்றில் ஓர் இரவு முழுவதும் தங்கி வனவிலங்குகளை இயற்கை சூழலில் கண்டு களிப்பதற்காக வந்திருந்தனர். அங்கே அவர்கள் இருவரும் தங்கி இருந்த அதே இரவில் இளவரசியின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் லண்டனில் மறைந்து விட்ட செய்தி மறுநாள் இளவரசிக்கு தெரிவிக்கப்பட்டு, அவரும் உடனடியாக லண்டன் திரும்பினார்.

 

 பிரிட்டிஷ் அரசகுல வழக்கப்படி மன்னரோ அல்லது அரசியோ மறைந்து விட்டால் அடுத்த நொடியே அரியணைக்கான அடுத்த வாரிசு அந்த இடத்திற்கு வந்து விடுவார்கள் என்பது மரபு. ட்ரீ டாப்ஸ் ல் இளவரசி எலிசபெத் இருந்த இரவிலேயே மன்னர் மறைந்து விட்டதால், மரபு படி அந்த கனமே அவர் இங்கிலாந்தின் அரசியாக ஆகிவிட்டார். அது குறித்து தனது நூலின் இறுதியில் ஜிம் கார்பெட் மிக மிக அழகாக குறிப்பிடுகிறார். 

 

"உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இளம்பெண் ஒருத்தி மரம் ஒன்று இளவரசியாக ஏறி, அதனின்று இறங்கும்போது மகாராணியாக இறங்கினார். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் " 

 

விருதுநகரிலும் இங்கிலாந்திலும் வானவில் அதிசயம்

 

திமுக நடத்தும் விருது வழங்கும் முப்பெரும் விழா 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்றது. முப்பெரும் விழாவினையொட்டி கடந்த வாரம் "முப்பெரும் விழா கலைஞர் திடலில்* திடீரென ஒரு வானவில் தோன்றியது. பந்தல் அமைக்கும் பணியில் இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு "ஒரு வானவில் போலே... முப்பெரும் விழா கலைஞர் திடல்..." என தனது முகநூலில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.

 

 மழை வந்த பிறகு தான் வானவில் தோன்றும் என்றில்லை, பனிமூட்டத்தில் நிறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீர் துளிகளாலும் வானவில் உருவாகுவதைப் போல... விருது வழங்குவதற்கு முன்பாகவே கலைஞர் திடலில் எழுந்த "தயாபரனின் நம்பிக்கை நீரூற்று" என அமைச்சரை நெட்டிசன்கள் பாராட்டினர்.

 

இதைப் போலவே மகாராணி மறைந்த முதல் நாள் இங்கிலாந்தில் உள்ள  பக்கிங்காம் அரண்மனையில் திடீரென இரட்டை வானவில் தோன்றியது. ராணி இரண்டாம் எலிசபெத் அரண்மனையின் முன்பு பூக்களையும் விளக்குகளையும் வைத்து அஞ்சலி செலுத்த வந்த மக்கள், இரட்டை வானவில்லோடு சேர்த்து தங்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்ட அதிசய  நிகழ்வும் நடந்துள்ளது.  

 

jlk

இருவேறு சுவாரசியமான தகவல்கள்

 

இங்கிலாந்து ராஜா குடும்பத்தில் பிறந்த இரண்டாம் எலிசபெத் தனது 96 வது வயதில் மறைந்திருக்கிறார். இவரின் வாழ்வில் இரண்டு சுவாரசியமான தகவலை பார்க்கலாம். மரம் ஒன்றில் இளவரசியாக ஏறி அதனின்று இறங்கும் போது மகாராணியாக இறங்கியது. மற்றொன்று இங்கிலாந்து அரச மரபு படி ஐந்தாம் ஜார்ஜிற்கு பிறகு எட்டாம் எட்வண்டு தான் அரியணை ஏற வேண்டும். ஆனால், அவர் அமெரிக்க காதலியை கரம் பிடித்ததால் அந்த வாய்ப்பு பரிபோனது. அதனால் இரண்டாம் எலிசபெத் தந்தையான ஆறாம் சார்ஜருக்கு அரச பதவி கிடைத்தது. அதை தொடர்ந்து 1952 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னர் மறைந்த உடன், இங்கிலாந்தின் அரசியாக இரண்டாம் எலிசபெத் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

(இந்தியாவின் 50 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியாவிற்கு வருகை தந்த மகாராணி எலிசபெத், நமது 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நேரத்தில் மறைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)

 

50 ஆண்டு கால புரட்சி நாயகர் 

 

சமூக நீதியை உள்ளடக்கி யாரும் புறக்கணிக்கப்படாமல் சுயமரியாதையுடன் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வழிவகை செய்யும் நூற்றாண்டு கால திராவிட மாடலை பின்பற்றி ஆட்சி புரியும் மக்கள் தலைவர் தமிழ்நாட்டு முதல்வர் மு .க. ஸ்டாலின். இளம்பெண் இளவரசியாக மரத்தில் ஏறி அதனின்று கீழ் இறங்கும்போது மகாராணியாக இறங்கியவர் இரண்டாம் எலிசபெத் என இயற்க்கை ஆர்வலர் ஜிம் கார்பெட் குறிப்பிடுவதை நாம் நினைவு கூறுவோம். இப்படி திடீர் முதல்வர் ஆனவர் மு க ஸ்டாலின் இல்லை.

 

 50 ஆண்டுகால நீடித்த தவத்தின் பலனால் கிடைத்தது தான் தமிழ்நாட்டு முதல்வர் பதவி. தனது பத்தாம் வகுப்பு படிப்பின் தொடக்க காலத்திலே அரசியல் வாழ்வு தொடங்கி விட்டது.  "முரசே முழங்கு" என்னும் இவரின் முதல் நாடகத்தின் மூலம் தொடர்ந்து சமூக எழுச்சி ஏற்பட்டு மாபெரும் வெற்றி கண்டது திமுக.

 

நூற்றாண்டு கால திராவிட ஆட்சி முறை

 

நூற்றாண்டு கால திராவிட ஆட்சி முறையை தனது 14 வயதிலேயே 'கோபாலபுரம் இளைஞர் திமுக' எனும் அமைப்பை நிறுவி தீவிரமாக செயல்பட தொடங்கி விட்டார் தளபதி.  இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனை அரசாட்சிக்கும், தமிழ்நாட்டை ஆளும் ஜார்ஜ் கோட்டை அரசாட்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.  2022 ஆம் ஆண்டு தாய் தமிழ்நாட்டை ஆளும் நாட்டரசின் முதல்வர் தனது 14 வயதில் தொடர்ந்த போராட்டத்திற்கு பிறகு, 2018 ஆம் ஆண்டு  66 வயதில் தான் திமுக கட்சியின் தலைவர் பதவிக்கே வந்திருக்கிறார்.

 

மனித மனத்தின் ஆற்றலை மிஞ்சிய ஆற்றல் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்ற சோவியத் ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் வைர வரிகளை நன்கு உணர்ந்து கொண்ட;  மு. க. ஸ்டாலின் தன் இளம் வயது முதலே கழக அமைப்பு உயிர் கொடுக்கத் தொடங்கி விட்டார்.

 

கெண்டக்கி கர்னல் விருது 

 

பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தத்துக்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் முதன்முறையாக மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற மாபெரும் தகுதியைப் பெற்றார் மு க ஸ்டாலின். சமூக மேம்பாட்டிற்காக இவர் எடுக்கும் மக்கள் நல பணிகளை பாராட்டி அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தின் காமன்வெல்த் கெண்டக்கி கர்னல் என்ற விருதை தலைவர் மு க ஸ்டாலின் பெற்றார். அண்ணாவையும் அரிசியையும் வைத்து தான் திமுக அரசியல் செய்கிறது என 2006 இல் கடுமையான விமர்சனங்களை பெற்றது திமுக. அதை சரி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து உண்மையை விளக்கி திராவிட ஆட்சியின் திட்டங்களை தனக்கே உரிய பாணியில் எளிமையாக விளக்கி பேசினார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், அண்ணா கிராமப்புற மறுமலர்ச்சி திட்டம் என மக்களை மேம்படுத்தும் புதிய உத்திகளோடு தான் வகித்த உள்ளாட்சித் துறையில் தீவிரமாக செயல்பட்டதால் மு க ஸ்டாலின் என்கிற புதிய பிராண்ட் தானாகவே உருவாகின.

 

தலைவர்களாய் இருப்பவர்களுக்கு எப்போதும் போராட்டம் தான். முன்னே செல்வோரை இழுத்துப் பிடிக்க வேண்டும். பின்னே வருவோரை இழுத்துக் கொண்டே போக வேண்டும் என்கிற ஜோசப் ஸ்டாலின் வரிகளை தொடர்ந்து கடைபிடித்ததால்; ஆயிரம் விளக்கு தொகுதியில் பகுதி பிரதிநிதியாக தன் அரசியல் வாழ்வை துவங்கி திமுகவின் உயர்ந்த பதவியான தலைவர் பொறுப்பிற்கு உயர்ந்திருக்கிறார்.

 

பக்கிங்காம் அரண்மனையும் ஜார்ஜ் கோட்டையும்

 

இங்கிலாந்து மகாராணி தனது 25வது இளம் வயதிலேயே அரண்மனையில் அறியனை ஏறியது போல இல்லாமல், நூற்றாண்டு காலம் திராவிட சித்தாந்தங்களை தனது 50 ஆண்டு கால தவ வாழ்வில் நடைமுறைப்படுத்தி; தனது 70 வது வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையில் தமிழ்நாட்டு முதல்வர் ஆனார் மு க ஸ்டாலின்.

 

இன்று இருக்கும் எதிரிகளை விட, துரோகிகளை விட இதற்கு முன்னால் பல எதிரிகளை திமுக பார்த்து விட்டது என கர்ஜிக்கும் முக ஸ்டாலின்... தமிழ்நாட்டை முன்னேற்றவே எனது சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன். எனது உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருகிறேன். சந்தோஷமான என் மக்களின் முகத்தை பார்த்தால் எனக்கு மாத்திரைகளை தேவையில்லை என்கிறார்.

 

'நாகரிகத்தின் தொட்டில் லண்டன் என்பார்கள்' ஆனால் நாகரீகத்தின் பிறப்பிடம் நாகரிகத்தின் வேர் தமிழ்நாடு தான். அது கீழடியில் இருந்தும் பொருநையிலிருந்தும் வேர் விட்டு பரவி வருவதை உலகிற்கு உணர்த்துகிறார் நம் முதல்வர். இதன் மூலம் தமிழர் பண்பாட்டை உலகம் வியக்கிறது.

 

ஒவ்வொரு தனி மனிதனின் கோரிக்கையை நிறைவேற்றுவதிலும், விளிம்பு நிலை மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு பாடுபடுவதிலும், தன் வாழ்நாளை கரைத்து வரும் நம் முதல்வரின் தியாக உணர்வுடன் கலந்த; நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்கும் என்றுமே கீழ் தான் லண்டனின் நாகரிகம் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

மணிகண்டன்

தலைவர், சென்னை நாணயவியல் அமைப்பு.

 

 

சார்ந்த செய்திகள்