![The intensity of searching the head of Sandhya](http://image.nakkheeran.in/cdn/farfuture/sBSgaVHeOhvxi4-idnxvcWN1GJnJID2B5iUA3WlvnP4/1549525704/sites/default/files/inline-images/z17.jpg)
கடந்த 21 ஆம் தேதி சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட வெட்டப்பட்ட கை, கால்களை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திரைப்பட இயக்குனரான பாலகிருஷ்ணனை அவரை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி மூன்று இடங்களில் தனித்தனியாக வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலையை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சந்தியாவின் கழுத்து முதல் இடுப்பு வரையிலான உடல் நேற்று அடையாறு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
தலை இடது கையுடன் கூடிய உடற்பகுதியை காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களுடன் பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தேடிவருகின்றனர். அதேசமயம் சந்தியாவை கொலை செய்த அவரது கணவர் பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.