Skip to main content

பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Instructions to bus operators and drivers!

 

பயணிகளிடம் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதைத் தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை இயக்குநர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். 

 

அதில், தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் காலஅட்டவணையின் படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தடப் பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றவும், இறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக்கட்டணங்களை பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு கொடுத்து வசூலிக்க வேண்டும் எனவும், பேருந்துகளில் உள்ள பழுதுகளை முறையாக சரி செய்து இயக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் பேருந்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்