Skip to main content

தகவல் பெறும் உரிமை சட்டப்படி ஊராட்சி ஆவணங்களை ஆய்வுசெய்த தனிமனிதர்...

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

An individual who examined panchayat documents under the Right to Information Act ...

 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது ராமநத்தம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் மேற்படி ராமநத்தம் ஊராட்சி உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோவிந்தசாமி, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநத்தம் ஊராட்சியின் ஆவணங்களை ஆய்வு செய்து பார்வையிட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தார். 


இதையடுத்து ஆணையத்தின் பொது தகவல் அலுவலர், கோவிந்தசாமிக்கு அனுப்பிய கடிதத்தில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தாங்கள் கேட்டு கொண்டுள்ளபடி ராமநத்தம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஊராட்சியின் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்ற அனுமதி வழங்கி கடிதம் அனுப்பி இருந்தார். 

 

அதேபோல் ராமநத்தம் ஊராட்சிக்கும் பொதுத்தகவல் அலுவலர் அனுப்பிய கடிதத்தில் கோவிந்தசாமி தங்கள் ஊராட்சி ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு, அக்டோபர் 20ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிந்தசாமிதமக்கு  அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின்படி 12ஆம் தேதி ராமநத்தம் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்ற கோவிந்தசாமியிடம் தங்களுக்கு வந்த கடிதத்தில் அக்டோபர் 20ஆம் தேதிதான் தங்களுக்கு ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது என்று கூறி கோவிந்தசாமியை திருப்பி அனுப்பி விட்டனர். 

 

பிறகு பொதுத்தகவல் அலுவலர் கிராம ஊராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின்படி, நேற்று 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் மீண்டும் ராமநத்தம் ஊராட்சி அலுவலகத்திற்கு கோவிந்தசாமி சென்றார். ஊராட்சி செயலாளர் பிரேம், தகவல் பெறும் உரிமை சட்டப்படி  கோவிந்தசாமி ஊராட்சி கணக்கு வழக்குகளை ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதித்தார். அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊராட்சியில் வரவு செலவு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார் கோவிந்தசாமி. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி ஒரு ஊராட்சி ஆவணங்களை ஒரு தனிநபர் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு அதிகாரம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இது சமூக அக்கறையுள்ள பல்வேறு தரப்பினரிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்