![Indigo launches Trichy-Tirupati direct flight](http://image.nakkheeran.in/cdn/farfuture/UiywEXa7EkZ_U0K-oXkQSo4PiC0K0bH_MkoPym5bZWw/1641276470/sites/default/files/inline-images/indigo.jpg)
திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, குவைத், மஸ்கட், அபுதாபி, துபாய், ஷார்ஜா, பஹ்ரைன், தோஹா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான சேவையும் சென்னை, பெங்களூரு, ஹைதாரபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், வருகின்ற 18-ம் தேதியிலிருந்து வாரத்தில் 4 நாட்களுக்கு திருச்சி-திருப்பதி இடையே நேரடி விமான சேவை அளிக்கப்பட உள்ளது. திருச்சியிலிருந்து திருப்பதிக்கு நேரடியாகச் செல்ல விமான சேவையை இன்டிகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு திருப்பதியில் புறப்படும் இந்த விமானம் மாலை 6.20 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும். அதேபோல மாலை 6.40 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருப்பதி சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.