Skip to main content

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மறைவு... தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

India's first female psychiatrist passes away - Tamil Nadu Chief Minister condoles!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (06/12/2021) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் உடல்நலக்குறைவால் தனது 98வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்திக் கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன். 

 

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மனநோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது, சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் அவர் நிறுவி, இயங்கிவரும் 'மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம்' அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. 

 

சிறந்த மருத்துவ சேவைக்காக, தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சாரதா மேனனின் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்