தமிழக நுகர்பொருள் நிர்வாக இயக்குனர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுகதேவியின் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் கிறிர்ஸ்டி பைர்ட் கிராம் என்ற நிறுவனம். இந்த நிறுவனம்தான் அரசுபள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டை மற்றும் சத்துமாவு போன்றவற்றை விநியோகித்து வருகிறது.
இந்நிலையியில் இந்த நிறுவனத்தோடு தொடர்புடைய சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கிவரும் நிறுவனங்ககளில் 70 மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்றுவருகிறது.
முட்டை விநியோகப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த இந்த புகாரில் கிறிர்ஸ்டி பைர்ட் கிராம் நிறுவனத்தோடு தொடர்புடைய சென்னையை சேர்ந்த 37 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தமிழக நுகர்பொருள் நிர்வாக இயக்குனர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுகதேவிக்கு இந்த முறைகேட்டில் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.