வெகு சாதாரண பிரச்சனைக்களுக்கெல்லாம் கொலைதான் தீர்வு என்பது தமிழகத்தில் பல கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. அதில், ஓசி டீ தரவில்லையென்பதால் டீக்கடைக்காரர் வெட்டிக் சாய்க்கப்பட்ட மதுரை சம்பவம், அமைதியாக செல்லுங்கள் என தூத்துக்குடியில் பைக் ரைடர்களை கண்டித்ததால் நடந்த இரட்டைக் கொலை சம்பவம். இந்த வரிசையில், புதியதாக இணைந்திருக்கின்றது தேவக்கோட்டையில் கொடுத்த கடனைக் கேட்ட இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவமணி அய்யப்பன். பங்கு வர்த்தகம், ஆன் லைன் வர்த்தகம் மற்றும் கொடுக்கல் வாங்கல் உட்பட தொழில் செய்து வந்திருக்கின்றார். சம்பவத்தினமான நேற்று இரவில் நண்பர்களுடன் சேர்ந்து திருப்புத்தூர் சாலையில் லட்சுமி தியேட்டர் எதிரிலுள்ள உணவகத்திற்கு உணவருந்த சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே இவருக்காகக் காத்திருந்த வெங்களூர் வினோத் கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியால் சிவமணி அய்யப்பன் தலையில் வெட்ட, சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார் அவர். வழக்கம்போல் தாமதாக வந்த காவல்துறையும், இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் எஸ்.ஐ. மருது ஆகிய இருவரை தலைமையாகக் கொண்டு இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வருகின்றது.
காவல்துறையோ தனது முதற்கட்ட தகவலில்., " அருணகிரி பட்டணம் பகுதியிலுள்ள சிவன்கோவிலில் வைத்துத் தான் வெங்களூர் வினோத்திற்கும், கொலையுண்ட சிவமணி அய்யப்பனிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெருங்கிய நட்பாக வினோத்தைக் கொண்டு கொடுக்கல் வாங்கல் தொழிலை செய்து வந்திருக்கின்றார் சிவமணி அய்யப்பன். ஒருக்கட்டத்தில் வினோத்தும் தன்னுடைய தேவைக்கு ரூ.10 ஆயிரத்தைக் கடனாகப் பெற்றிருக்கின்றார். கொடுத்தக் கடனை திருப்பிக் கேட்கவே, " எப்படி நீ என்னிடமே ரூபாயைக் கேட்கலாம்..? உனக்காகத் தானே வரவு செலவுப் பார்த்தேன்.? என வாக்குவாதம் முற்றத் தொடங்கியுள்ளது இருவருக்கும். அவ்வேளையில் அங்கு வந்த சிவமணி அய்யப்பனின் அண்ணன் கணேசனும் தம்பிக்கு சாதகமாக பேச, கணேசனைப் பதம் பார்த்தது வினோத்தின் பட்டாக்கத்தி. இது கடந்த வருடம் 11ம் நடந்த சம்பவம். இது பொருட்டு வழக்கு நடந்து வந்த வேளையில் நேற்றிரவு சிவமணி அய்யப்பனை சராமரியாக வெட்டிக் கொன்றுள்ளார் வினோத்." என்கின்றது. வெறும் ரூ.10 ஆயிரத்திற்காக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தேவக்கோட்டையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.