Skip to main content

உன்னைய யார் இங்க வரச்சொன்னது...? எஸ்.ஐயை விரட்டிய நீதிபதி...! ஆறுதலளித்த எஸ்.பி..!!!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

பொதுவாக காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் ஏழாம் பொருத்தமே.! இத்தகைய சூழலில் பெண்.எஸ்.ஐ.யை நீதிமன்ற வளாகத்திலேய ஒருமையில் அவதூறாக பேசியுள்ளார் பெண் நீதிபதி ஒருவர் என வாட்ஸ் அப் தகவல் வைரலாக காவல்துறை மட்டத்தில் கொந்தளிப்பு நிலவி வருகின்றது.

 

incident in ramanathapuram


ராமநாதபுரம் மாவட்டம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் ஜெனிபா ராணி. இந்த வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்து உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 என்ற நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகின்றது. ஜெனிதா என்பவர் இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். தங்களுடைய பிரிவின் கீழிலுள்ள வழக்கின் சம்பந்தமாக நீதிமன்ற பணிகளுக்காக நீதிமன்றத்தில் நேற்று காலை 10 மணிக்கே ஆஜராகியுள்ளார் எஸ்.ஐ.ஜெனிபா ராணி மற்றும் கார்த்திக்கேயன், நசுரூதீன் உள்ளிட்ட போலீசார். நீதிபதி இருக்கைக்கு வந்த உடனே, " உன்னை யார் என்னுடைய கோர்ட்க்கு வர சொன்னது.? உடனே நீ வெளியே போ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அங்கு நீதிமன்றப் பணியில் இருந்த ஊழியர்கள் நான்கு பேரை அழைத்த நீதிபதி, "இவளை அப்படியே இழுத்து கீழே கொண்டு விடுங்கள்." என உத்தரவிட அங்கேயே மயங்கி சரிந்த எஸ்.ஐயை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் உடனிருந்த போலீசார்.

இதுக்குறித்து காவல்துறை வட்டாரத்தில் வாட்ஸ் அப்-களில் வைரலாக பரவ, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருக்கும் பெண் எஸ்.ஐ.-யை நேரடியாக சந்தித்து ஆறுதலளித்து விசாரணையை தொடங்கியுள்ளார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான வருண்குமார்.

என்ன காரணத்திற்காக இந்த விவகாரம்..? நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன..? என்ற பல கேள்விகள் எழும்பிய நிலையில், வணிக குற்றப்புலனாய்வு பிரிவின் டி.எஸ்.பி.யான ராஜேஸ்வரியை வரவழைத்து விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றார் மாவட்ட எஸ்.பி. அதேவேளையில், பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் பெண் எஸ்.ஐ.யை சந்தித்து ஆறுதலளித்த எஸ்.பி.க்கு காவல்துறையினர் நன்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்